என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » ரம்ஜான் தொழுகை
நீங்கள் தேடியது "ரம்ஜான் தொழுகை"
ரம்ஜான் பண்டிகை இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அனைத்து மசூதிகளிலும் சிறப்பு தொழுகை நடைபெற்றது. #EidMubarak #EidCelebration #EidNamaz
சென்னை:
ஈகைத் திருநாளாம் ரம்ஜான் பண்டிகை இன்று நாடு முழுவதிலும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. முப்பது நாட்கள் நோன்பிருந்து வழிபாடுகளில் ஈடுபட்டு, தான தர்மங்களை வழங்கி திருமறை ஓதி இறை உணர்வோடு கழித்த நிலையில், நிறைவாக இந்த நோன்புப் பெருநாள் இன்று கொண்டாடப்படுகிறது.
டெல்லியில் உள்ள புகழ்பெற்ற ஜும்மா மசூதியில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர். ஜம்மு காஷ்மீரில் உள்ள ரதபோராவில் நடைபெற்ற சிறப்பு தொழுகை, மும்பை மினரா மசூதியில் நடைபெற்ற சிறப்பு தொழுகை என அனைத்து பகுதிகளிலும் நடைபெற்ற தொழுகைகளில் ஏராளமானோர் பங்கேற்று தொழுகை நடத்தினர்.
மத்திய பிரதேச மாநிலம் போபாலில் ஈத்கா மைதானத்தில் நடந்த சிறப்பு தொழுகையில் முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கமல்நாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள காந்தி முனிசிபல் ஸ்டேடியத்தில் நடந்த தொழுகையில் முதல்வர் சந்திரபாபு நாயுடு கலந்துகொண்டார். #EidMubarak #EidCelebration #EidNamaz

ஒரு மாத காலம் கட்டுப்பாடாக வாழ உதவியதற்காகவும் இம்மாதத்தில் இறைமறையாம் திருக்குர்ஆனை அருளியதற்காகவும் இறைவனுக்கு நன்றி செலுத்தும் நாள் இது. இந்த பெருநாளை முன்னிட்டு அனைத்து மசூதிகளிலும் சிறப்பு தொழுகைகள் நடைபெற்றன. ‘ஈத்கா’ எனும் திறந்தவெளி தொழுகையும் நடைபெற்றது.
இந்த பெருநாளில் இஸ்லாமிய பெருமக்கள் காலையில் எழுந்தவுடன் குளித்து, புத்தாடையோ அல்லது தங்களிடம் இருப்பவற்றில் சிறந்த ஆடையையோ அணிந்து தொழுகைக்கு சென்றனர். தொழுகை நிறைவுற்றதும் மக்கள் ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி பரஸ்பரம் வாழ்த்துக்களை தெரிவித்தனர். மேலும் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர்.
டெல்லியில் உள்ள புகழ்பெற்ற ஜும்மா மசூதியில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர். ஜம்மு காஷ்மீரில் உள்ள ரதபோராவில் நடைபெற்ற சிறப்பு தொழுகை, மும்பை மினரா மசூதியில் நடைபெற்ற சிறப்பு தொழுகை என அனைத்து பகுதிகளிலும் நடைபெற்ற தொழுகைகளில் ஏராளமானோர் பங்கேற்று தொழுகை நடத்தினர்.
மத்திய பிரதேச மாநிலம் போபாலில் ஈத்கா மைதானத்தில் நடந்த சிறப்பு தொழுகையில் முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கமல்நாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள காந்தி முனிசிபல் ஸ்டேடியத்தில் நடந்த தொழுகையில் முதல்வர் சந்திரபாபு நாயுடு கலந்துகொண்டார். #EidMubarak #EidCelebration #EidNamaz
×

X